"

Monday, December 17, 2018

எவ்வாறு ஒரு கணினியை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இணையதள கடவுச்சொல்லை எளிதாக கண்டுபிடிப்பது?



நாம் தினந்தோறும் பல்வேறு இணையதள சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு பயன்படுத்தக்கூடிய நிகழ்வுகளில் நாம் பயன்படுத்தும் கடவுச்சொல்லை சில நேரங்களில் மறந்து விடுவதுண்டு. இவ்வாறு நடந்து விட்டால் அந்த இணையதளத்தின் கடவுச்சொல்லை கண்டறிவதற்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். அவ்வாறான பிரச்சினையை மிக எளிதாக நாம் சரி செய்து கொள்ள முடியும். ஏனெனில், நாம் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கடவுச்சொல்லுடன் நம்முடைய பிரவுசரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அதை மிக எளிதாக சில உத்திகளைக் கையாண்டு கண்டறிய இயலும். 



பெரும்பாலான இணையதள சேவைகளை குரோம் பிரவுசர் வழியாகவே பயன்படுத்தி வருகிறோம். இந்த குரோம் பிரவுசரில் வலது மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும் இந்த புள்ளிகளை கிளிக் செய்யும்போது, அது குரோம் பிரவுசரின் செட்டிங்குகள் உள் செல்லும். அப்பொழுது ஒரு புதிய பகுதிக்கு அழைத்துச் செல்லும்.


அதில் People, Appearance,Search engine,Default browser,On startup அதன் கீழாக Advance என இருக்கும் அதை கிளிக் செய்யும் பொழுது Privacy and security மற்றும் Passwords and forms இருக்கும். இதில் Passwords and forms செய்யவும். இதில் இரண்டு option உள்ளன. உன் ஒன்று  Autofill settings மற்றொன்று Manage passwords. இதில் Manage passwords கிளிக் செய்யவும். 


இதில் நாம் பயன்படுத்தக்கூடிய இணையதளத்தின் கடவுச்சொல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மறைந்து காணப்படும்.அதன் அருகில் ஒரு கண் போன்ற அமைப்பு கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதை கிளிக் செய்தால் எந்த அடியேனுடைய கடவுச்சொல் தேவையோ அதை நாம் காணமுடியும். 


இந்த செயல்பாட்டின் மூலம் மற்றவர் அல்லது அலுவலகத்தில் நமக்கு தராமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டையும் நாம் எளிதாக கண்டறிய முடியும். ஆனால் இது ஒரு வரம்பு மீறிய செயல். சில சந்தர்ப்பங்களில் இது நமக்கு பெரும் துயரத்தை தரக் கூடியதாக அமைந்து விடலாம். அவசியமான சந்தர்ப்பங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Adbox