"

Thursday, November 29, 2018

இயற்கை மூலிகைகளும் & பயன்களும்...!


ஓமம்: ஓமம் ஒரு சிரந்த ஜீரன மருந்து மற்றும் நரம்புகளைத் தூண்டி விட வல்லது. உடல் எடையைக் குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். மேலும் மூட்டு வலிகளை நீக்கவும் வாத சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் சிறந்தது
ஏலக்காய்: வயிற்று பகுதியிலும், நுரையீரல்களிலும் ஏற்படும் அதிகப் படியான கபத்தை நீக்கும். ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
சீரகம்: சீரகம் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. சத்துக்களை உடல் உட்கிரகத்துக் கொள்ள உதவுகிறது. செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
வேப்பிலை: வேப்பிலை மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்பு மூலிகை ஆகும். தோல் நோய்கள், தோல் பாதிப்பு, பித்தக் கோளாறுகள் ஆகியவற்றுக்குச் சிறந்த மூலிகை மருந்து ஆகும்.
அதிமதுரம்: அதிமதுரம் தொண்டை கட்டை நீக்கி, அமிலத் தன்மையைக் குறைக்கிறது. அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதேபோல் அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு: தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

No comments:

Post a Comment

Adbox