வாழைப்பழத்தைச் சாப்பிடுவதையோ அல்லது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதையோ நாம் அனைவரும் விரும்புகிறோம். மனித உடலுக்குத் தேவையான அனைத்துக் கனிமங்கள் மற்றும் வைட்டமின்களை அதிக அளவில் கொண்டுள்ளது வாழை. சாப்பிடுவதற்குப் பதில் வெளிப்புறமாகப் பயன்படுத்தினால் அழகான மற்றும் பளபளப்பான தோலைப் பெறலாம்.
கொலாஜனின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தோலின் நெகிழ்ச்சித்தன்மையை தக்கவைக்க உதவுகிறது.
தயாரிப்பு முறை 1
வாழைப்பழத்தை முதலில் சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இது உங்கள் தோலுக்கு குறைவான அழுத்தத்தை கொடுத்தல் மற்றும் வறட்சியைச் சரி செய்தல் போன்றவற்றால் புத்துணர்வூட்டும் வேலையைச் செய்கிறது.
தயாரிப்பு முறை 2
ஒரு பழுத்த வாழை தேவை. வாழைப்பழத்தை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை ப்ளெண்டரில் போட்டு நன்றாகக் கலக்கவும். 1 தேக்கரண்டி தேனை இந்தக் கலவையில் போட்டு நன்கு கலக்கவும். உங்கள் முகத்தில் இந்த கெட்டியான கலவையைப் பூசி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான சுடுநீரால் கழுவவும்.கரும்புள்ளிகளை எளிதில் மறைத்துவிடும்.கறைகளை நீக்கி, மந்தமான தோலை ஷைனிங் ஆக்குகிறது.
தயாரிப்பு முறை 3
ஒரு வாழைப்பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும். அடுத்து, அதை பேஸ்ட்டாக்க நன்றாகப் பிசையவும். பிசைந்த கலவையில், 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் பூசுங்கள்.20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். குளிர்ந்த நீரில் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை சுத்தம் செய்யுங்கள்.முகப்பரு வடுக்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை குறைக்கும். சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment