மூக்கிலிருந்து ரத்தம் வருவது பற்றி சாதாரணமாக நினைக்காமல் என்ன காரணத்தினால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டும். அதிகமாக தும்மல் வருவது, மூக்கை தேய்ப்பது, குளிர் காலத்தில் வீசும் உலர்ந்த காற்று, காயங்கள், அலர்ஜி, சைனஸ் போன்ற சுவாச கோளாறுகள், மலேரியா, டைபாய்டு போன்ற சிலவகை காய்ச்சல்கள். மூக்கிலிருக்கும் குறிகிய ரத்த நாளங்கள் வீங்கும் போது தொடர்ந்து ரத்தம் வரலாம். ஆனால் வீட்டிலேயே சுலபமாக சரி செய்ய கூடிய குறிப்புகளை பார்ப்போம்.
எஸென்ஷியல் எண்ணெய்
2-3 சொட்டு லாவெண்டர் எண்ணெய் அல்லது சைப்ரஸ் எஸென்ஷியல் எண்ணெய்
ஒரு கப் தண்ணீர்,ஒரு காகித துண்டு எண்ணையை தண்ணீரில் கலக்கவும். காகித துண்டை அதில் முக்கி அதில் உள்ள நீரை பிழியவும்.அந்த காகித துண்டை மூக்கில் வைத்து மென்மையாக இரண்டு நிமிடங்கள் அழுத்தவும். உங்களுக்கு எண்ணையால் தொந்தரவு இல்லை என்று தெரிந்தால் நேரடியாக இரு துளிகள் மூக்கினுள் விடலாம். ரத்தம் நிற்கும் வரை இரு நிமிடங்களுக்கு ஒருமுறை இதை செய்ய வேண்டும். சைப்ரஸ் எண்ணெயில் காயங்கள் மற்றும் மூக்கிலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்தும் காரணிகள் உள்ளன. அதுவே மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்துகிறது. லாவண்டர் எண்ணெய் மூக்கிலுள்ள காயங்களை குணப்படுத்துகிறது.
ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் சுற்றி மூக்கின் மேல் வைக்க வேண்டும்.நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.எப்போதெல்லாம் செய்ய வேண்டும்
ரத்தம் வடிதல் நிற்கும் வரை சில மணி நேரங்கள் இடை வெளி விட்டு மீண்டும் செய்யலாம். ஐஸ் கட்டிகளில் உள்ள குளிர் ரத்தத்தை விரைவாக உறைய வைத்து ரத்தம் வடிதலை சரி செய்கிறது.
பெட்ரோலியம் ஜெல்லி
மூக்கில் உலர் தன்மை நிலவும் போது அது மூக்கிலிருந்து ரத்தம் வருவதற்கு காரணாமாகலாம். பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதால் மூக்கின் வறட்சியைத் தடுக்கலாம். மூக்கின் உட்சுவர்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுவதால் அவை ஈரப்பதத்துடன் இருக்கும். சளி, சைனஸ் அல்லது அழுத்தத்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த இது மிகவும் பயனுள்ள முறை.
வைட்டமின் E
வைட்டமின் E மாத்திரைகளை உடைத்து அதிலுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.அந்த எண்ணையை மூக்கினுள் ஊற்ற வேண்டும்.இரவு முழுதும் அப்படியே விட வேண்டும்.மூக்கினுள் உலர் தன்மையை உணரும் போதெல்லாம் இதை செய்யலாம்.
மூக்கிலுள்ள படலங்களை ஈரப்பதமாக வைத்து கொள்ள வைட்டமின் E எண்ணெய் பயன்படுகிறது. இது நம் தோலை மிகவும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும். இது மூக்கிலிருந்து ரத்தம் வடிதலை தடுக்க இது சிறந்த சிகிச்சையாக உள்ளது.
No comments:
Post a Comment