"

Saturday, April 28, 2018

சித்ரா பவுர்ணமி...! நாளை மாலை 6 மணிக்கு...நிகழப்போகும் அற்புதம்..!

சித்ரா பவுர்ணமியன்று, நாளை மாலை சரியாக 6 மணிக்கு மாபெரும் அதிசயம் நிகழ உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் அதே நேரத்தில் அழகாக சந்திரன் தோன்றும் காட்சியை பார்க்க முடியும்.ஆனால் சூரியன் மறையும் போது சந்திரன் தோன்றும் அறிய நிகழ்ச்சி உலகிலேயே இரு இடத்தில் மட்டுமே பார்க்க முடியும்.1. கன்னியாகுமரி 2. ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை சித்ரா பவுர்ணமி என்பதால், இந்த அபூர்ப காட்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து எர்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கன்னியாகுமரி அடுத்த பழத்தோட்டம் என்ற இடத்தில உள்ள முருகன் குன்றத்தில் இருந்து இந்த அபூர்வ காட்சியை பார்க்க முடியும்


No comments:

Post a Comment

Adbox