"

Saturday, April 7, 2018

ஜியோ 5ஜி - நாம் கண்ட கனவு நனவாகியது; அம்பானி ஆட்டம் ஆரம்பம்.!


பார்தி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அதன் 4ஜி வேகத்தை தாண்டிய 5ஜி வேகத்தை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஜியோ 5ஜி வேக பரிசோதனையானது, ஐபில் 2018 போட்டிகளில் நடைபெறும் டெல்லி மற்றும் மும்பையில் ஸ்டேடியங்களில் நிகழ்த்தப்படவுள்ளது என்பதும், இதுவொரு மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி டெக்னாலஜி சோதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மிமோ (MIMO) தொழில்நுட்பமானது, 30 மெகாஹெர்ட்ஸ் பரந்த பேண்ட் ஸ்பெக்ட்ர, என்கிற அளவை கூடுதலாக 5 மடங்கு அதிகமாக விரிவாக்கும் திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும். இது நெரிசலான இடங்களில் கூட, மிகவும் மென்மையான இணைய வசதியை உறுதி செய்யும்.
நடக்கப்போகும் சோதனையை பொறுத்தவரை, டெல்லி மற்றும் மும்பை மைதானங்களில் - மேசிவ் மிமோ, 4ஜி eNodeBs, வைஃபை மற்றும் சிறிய செல்கள் ஆகியவற்றுடனான வயர்லெஸ் பிராட்பேண்ட் சொல்யூஷன்கள் இணைக்கப்படும். அதன் வழியாக ஜியோ பயனர்களை வைத்து 5ஜி சோதனை நிகழ்த்தப்படும்


நேற்று வெளியான ஏர்டெல் அறிக்கையொன்றின்கீழ், பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் அதன் 5ஜி சோதனையை நிகழ்த்தவுள்ளதாக அறியப்பட்டது. ஏர்டெல் 5ஜி சோதனையானது ஜியோவை போல டெல்லி மற்றும் மும்பை மைதானங்களில் மட்டுமின்றி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் (அதாவது டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை) நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் கூறியபடியே ஏர்டெல் நிறுவனத்தின் இந்த மேசிவ் மிமோ (மல்டிபிள் இன்புட் அண்ட் மல்டிபிள் அவுட்புட்) தொழில்நுட்பமானது, ஒரே அளவிலான ஸ்பெக்ட்ரமின், நெட்வெர்க் கெபாசிட்டியை 5 முதல் 7 மடங்கு அதிகமான விரிவுபடுத்தும். இது ஐபில் போட்டி நாடாகும் மைதானத்தை சுற்றியுள்ள மிகப்பெரிய எண்ணிக்கையிலான பயனர்களை அடையும் திறன் கொண்டுருக்கும்.

No comments:

Post a Comment

Adbox