கூகுள் சமீபத்தில் (கடந்த ஆண்டு) அறிமுகப்படுத்திய Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே . தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
முன்னர்போல முழுமையாக டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே போதுமானது. வேலை செய்யும்.
இதுபோல கூஃகிள் தனது பிளே ஸ்டோரில் மொபைல் விளையாட்டுகளுகாக Trailer மற்றும் Game Play Screen Shot போன்றவையும் சேர்த்துள்ளது .
புதிதாய் மொபைல் விளையாட்டுகளுக்கென பிரீமியம், பணம் செலுத்தி பயன்படுத்துவதற்கென தனிபகுதியும் வழங்க உள்ளது .
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Try Now வசதியினை, தற்போது ஸ்டோரில் இருக்கும் ஏப் வழங்குனர்கள் மேம்படுத்திக் கொண்டால் "டிரை நவ்/ TRY NOW" செயலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என தெரிய வருகிறது. மேலும் பிளே ஸ்டோரின் முதற் பக்கத்திலேயே டிரை நவ் செயலிகளை கூகுள் பரிந்துரைக்கவும் செய்கின்றது.
No comments:
Post a Comment