"

Wednesday, March 28, 2018

சென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்... எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்


வெப்பத்தின் பாதிப்பு சென்னையில் அதிகம் தெரியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை கடந்து செல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது தமிழ்நாடு வெதர்மேன் பதிவுகளைத்தான். சென்னை வெள்ளத்தின் போது இவர் பதிவிட்ட கருத்துக்கள் பலவும் பயனுள்ள வகையில் இருந்தது.
கோடை காலத்தில் வெயில் பாதிப்பு பற்றியும் பதிவிட்டு வருகிறார் பிரதீப் ஜான். சென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் என்று கூறியுள்ளார்.
பிரதீப் ஜான் தனது பதிவில், சென்னையில் கிழக்கில் கடற்கரைப் பகுதியில் இருந்து இதமான காற்று வந்ததால், இதுநாள் வரை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்துவந்தது.
இதனால், 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் இருந்தது. வழக்கமாக 34.5 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
ஆனால், இந்த இதமான காற்று காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்தது. ஆனால், வரும் 28 மற்றும் 29ஆம் தேதி முதல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் அழுத்தம் காரணமாக, நிலத்தில் இருந்து வீசும் காற்று வலுப்பெறும்.
சென்னையில் 28ஆம் தேதியில் இருந்து வெயில் சுட்டெரிக்கும், அதேசமயம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை விட்டுவிட்டு பெய்யக்கூடும். அதேசமயம், அதிகமான மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

No comments:

Post a Comment

Adbox