"

Saturday, March 24, 2018

இட்லி மாவை ரசித்து ருசித்த யானை.....!


கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலைப்பகுதி, பொன்னூத்து அம்மன் கோயில்மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும், அங்குள்ள உணவுப் பொருட்களை தின்றுவருகின்றன.
யானைகள் மலைப்பகுதியில் இருந்து இறங்கி வருவதை தடுக்க வன்ததுறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது.

Read more

 இந்த நிலையில் கடந்த 19ம் தேதிஅதிகாலை 2 மணியளவில் மலையில் இருந்து இறங்கி வந்த காட்டு யானை ஒன்று அம்மன் கோயில் கேட்டை திறந்து உள்ளே வந்து உணவை தேடியது. அங்கு ஒன்றும் கிடைக்காததால் கோயில் உள்ளே சென்று அங்குள்ள சமையல் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றது. அங்குள்ள பாத்திரங்களையெல்லாம் தேடிப் பார்த்த யானை இட்லி மாவை தனது தும்பிகையின் உதவியோடு ருசித்து குடித்து தீர்த்தது. மாவு காலியானவுடன் அருகிலுள்ள ஸ்டோர் ரூம்மை திறக்க முயற்சித்துள்ளது. திறக்க முடியாததால் அங்கிருந்து திரும்பிய யானை கோயில் பின் வழியாக, இறுதியாக தேங்காயை தின்றுவிட்டு மீண்டும் காட்டுக்குச் சென்றது.
இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயிவிவ் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Adbox