இப்போது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டது, இவை பலருக்கும் மிகமிக உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிவியில் ஒளிபரப்பாகும் பாடல்களை மிக எளிமையாகவும், விரைவாகவும் ஒரே கிளிக் மூலம் டிராக் செய்து பார்க்க முடியும்.
டிவியில் ஒளிபரப்பாகும் பாடலை மொபைலில் டிராக் செய்ய கண்டிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இணையம் மற்றும் குறிப்பிட்ட அப்பிளிக்கேஷன் தேவைப்படுகிறது. டிவி, ரேடியோ போன்றவற்றில் நீங்கள் கேட்கும் பாடகளை விரைவாக டிராக் செய்து ஸ்மார்ட்போன்களில் பார்க்க முடியும், அதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் உங்கள் பிளே ஸ்டோரில் ஷாஸம் (shazam app) எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்த ஷாஸம் (shazam app) எனும் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.
வழிமுறை-3:
அடுத்து டிவியில் ஒளிபரப்பாகும் பாடலை நீங்கள் தேர்வுசெய்து கொள்ள வேண்டும்,பின்பு ஷாஸம் செயலியை திறந்து டச் டூ ஷாஸம்-என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4:
டச் டூ ஷாஸம்-என்பதை கிளிக் செய்தவுடன் டிவியில் ஒளிபரப்பாகும் பாடலை உங்கள் ஸ்மார்ட்போனில் எளிமையாக பார்க்க முடியும்.
வழிமுறை-5:
இந்த ஷாஸம் செயலி பொறுத்தவரை ரேடியோவில் நீங்கள் கேட்கும் பாடலை கூட டச் டூ ஷாஸம் விருப்பம் மூலம் ஸ்மார்ட்போனிலும் பார்க்க முடியும்.
வழிமுறை-6:
இந்த ஷாஸம் செயலி பொதுவாக பயன்படுத்த மிக அருமையாக இருக்கும், அதன்படி பல்வேறு இடங்களில் ஷாஸம் செயலி பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment