வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த அஸ்ட்ரோநாட் ஸ்காட் கெல்லி என்பவர் சர்வதேச வின்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்தார். கெல்லி இரட்டையர்களில் ஒருவர்.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பூமிக்கு திரும்பி வந்தார். சர்வதேச வின்வெளி மையத்தில் ஒரு ஆண்டு தங்கியிருந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் கெல்லியின் ரத்த மாதிரி சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அவரது மரபணுவில் 7 சதவீதம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. கெல்லியின் மற்றொரு சகோதரரின் டிஎன்ஏ.வுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாற்றம் உறுதியாகியுள்ளது.
இந்த தகவல் நாசாவின் இரட்டையர் ஆராய்ச்சி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து எனது மரபணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அறிந்து கொண்டதாக கெல்லி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment