"

Saturday, February 10, 2018

TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து

அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், 2017 செப்., 16ல், எழுத்துத்தேர்வு நடந்தது; 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 7ல் வெளியாகின. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு முடிவுகளில், பெரும் குளறுபடி நடந்துள்ளதாக, சிலர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், டி.ஆர்.பி., ஊழல் புகார்களை விசாரிக்க, சீனிவாசன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தனி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவரது விசாரணையை தொடர்ந்து, பாலிடெக்னிக் தேர்வு, முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, 2017 செப்., 16ல் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த பணிக்கான தேர்வு, மீண்டும் ஆகஸ்ட்டில் நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, மே மாதம் வெளியிடப்படும்.ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள், மீண்டும் எழுத வேண்டும்; மீண்டும் விண்ணப்பிக்கவும் வேண்டும்.
ஆனால், தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Adbox