"

Tuesday, February 6, 2018

சென்னை சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கம்: அரசாணை வெளியீடு: அரக்கோணம் வரை நீட்டிப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லையை அரக்கோணம் வரை நீட்டிக்கும் அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அந்தத் துறையின் அப்போதைய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
புதிய அறிவிப்புகளை வெளியிடும் போது, சென்னை நகரின் மக்கள் தொகை நெருக்கத்தைக் குறைக்கவும் அதிவேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளில், வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியுள்ளது.
அதனால், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலுர் மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தையும் உள்ளடக்கி, 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் அளவில், சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
சென்னை நகரத்தின் எல்லையை விரிவாக்கும் பணியைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ. தொடங்கியுள்ளது. இதற்கான அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் அண்மையில் வெளியிட்டார்.
அதன்படி, இந்தத் திட்டம் குறித்து பொது மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் உத்தரவின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்குள் பொது மக்களின் கருத்து அறிந்து சி.எம்.டி.ஏ.,வுக்குத் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி, திருவள்ளூர், காஞ்சிபுரத்தின் சில கிராமங்களும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், நெம்மேலி தாலுகாக்களும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக தனது உத்தரவில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பரப்பு எவ்வளவு விரிவாகும்?: சென்னைப் பெருநகரத்தின் எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்டதாக உள்ளது. 43 ஆண்டுகளாக இதே எல்லையில்தான் சென்னை பெருநகரம் இருந்து வருகிறது. புதிய திட்டப்படி, ஆயிரத்து 189 சதுர கிலோமீட்டரில் இருந்து, 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டராக சி.எம்.டி.ஏ., எல்லைப் பரப்பளவு விரிவடையும்.

No comments:

Post a Comment

Adbox