சம்பளத்திலிருந்து டிடிஎஸ் வரிப் பிடித்தங்கள் அதிகரிப்பதைக் குறைக்க நீங்கள் சில விஷயங்களைச் செய்யலாம்.
விடுமுறை பயண ஊக்கத்தொகைகள்
உங்கள் சம்பளத்தில் பயணச் சலுகைகள் சேர்க்கப்படவில்லை என்றால், அதை உங்கள் சம்பளத்தில் சேர்க்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கலாம். ஒரு நேர்மையான குடிமகனாக விலக்குகளைத் தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் பயணச் செலவு ஊக்கத்தொகைகளைப் பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளீர்கள் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
பயணச் சலுகை ஊக்கத்தொகைகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1600 வரை அல்லது ஒவ்வொரு வருடமும் ரூ. 19,200 வரை அளிக்கப்படுகிறது. முன்பு இந்தத் தொகை மாதத்திற்கு ரூ.800 ஆக இருந்தது. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் இந்தத் தொகையை அதிகரித்தார்.
மருத்துவக் கட்டணங்கள்
அதே போல, உங்கள் மருத்துவச் செலவுகளுக்கு எதிராக நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 15,000 வரை மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறும் ரீ இம்பர்ஸ்மெண்ட்டுக்கு தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு முறை நீங்கள் மருந்துக் கடைக்கோ அல்லது டாக்டரை பார்க்கவோ செல்லும் போது மருந்து வாங்கிய ரசீதுகள் அல்லது மருத்துவக் கலந்தாலோசனை செய்ததற்கான கட்டண ரசீதுகளை உங்கள் முதலாளியிடம் ஒப்படைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே இதனால் உங்கள் டிடிஎஸ் பொறுப்புக்களைக் குறைக்க முடியும்.
உணவு கூப்பன்கள்
உங்கள் நிறுவனம் இதுவரை உணவு கூப்பன்கள் அல்லது உணவு வவுச்சர்களை இதுவரை வழங்கவில்லை என்றால், அதை வழங்குவதைப் பற்றிக் கருதுமாறு நீங்கள் அவர்களிடம் கோரிக்கை வைக்கலாம். ஒரு உணவு வவுச்சரின் மீது ரூ. 50 தொகைக்கான சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது 25 வேலை நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் உணவு வவுச்சர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 2,500 வரை (மதிய உணவு மற்றும் இரவு உணவுக்குச் சேர்த்து ரூ. 100 X 25 நாட்கள் என்று கருதினால்) வரிவிலக்கு அளிக்கப்படலாம்.
அப்படியென்றால் ஆண்டுக்கு ரூ. 30,000 வரிவிலக்குப் பெறுகிறது. எனவே நீங்கள் உணவு கூப்பன்கள் மூலமாக 10 சதவிகித வரி அடைப்புக்குள் இருப்பவராக இருந்தால் நீங்கள் ரூ. 3000 வரையும் 20 சதவிகித வரி அடைப்புக்குள் இருப்பவராக இருந்தால் ரூ. 6000 வரையும், 30 சதவிகித அடைப்புக் குறிக்குள் இருந்தால் ரூ. 9,000 வரையும் சேமிக்கலாம்.
பிரிவு 80 சி இன் நற்பயன்கள் மூலம் டிடிஎஸ்-ஐ சேமித்தல்
மேலே உள்ளவற்றைத் தவிர்த்து, சம்பளத்தில் டிடிஎஸ் தவிர்க்க மொத்த தொகையையும் பிரிவு 80 சி இன் கீழும் இதர திட்டங்களிலும் முதலீடு செய்து பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் சம்பளத்திலிருந்து டிடிஎஸ்அல்லது வரிப் பிடித்தத்தைக் குறைப்பதற்கு அதிகமாக விரும்பித் தேர்ந்தெடுக்கப்படும் வழிகளில் ஒன்று பிபிஎப் எனப்படும் பொது வைப்பு நிதியில் முதலீடு செய்வதாகும். பிபிஎப் உங்களுக்கு ஆண்டுக்கு 1.5 இலட்சம் வரை வரி விலக்கை அளிக்கிறது.
வரியைக் குறைக்க இதர வழிகள்
நீங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பவராக இருந்தால், அந்தத் தொகைக்கும் நீங்கள் வரிவிலக்கு தாக்கல் செய்யலாம். இருந்தாலும், அவை குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களுக்கும் மற்றும் உதவி நிறுவனங்களுக்கும் இந்தச் சலுகை கிடைக்காது. எனவே, நீங்கள் யாருக்கு நன்கொடை அளிக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள் மேலும் நீங்கள் அந்தத் தொண்டு நிறுவனத்தின் பான் எண்ணை வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது தான் உங்களை வரிகளைச் சேமிக்க உதவும்.
எல்டிஏ வரிகளைச் சேமிக்கவும் டிடிஎஸ்-ஐ குறைக்கவும் உதவும்
மேலும் நீங்கள் உங்கள் முதலாளியிடம் விடுமுறை பயண உதவித்தொகையை அளிக்கும்படி கேட்கலாம். இது உங்கள் வரி பொறுப்புகளைக் குறைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். இருந்தாலும், நீங்கள் எல்டிஏ வின் வரிப்பயன்களைப் பெற தாக்கல் செய்வதற்கு உங்கள் பயணச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். நீங்கள் 4 வருட காலத்தில் 2 முறை எல்டிஏ தாக்கல் செய்யலாம். இந்த டிடிஎஸ் குறைப்பு அல்லது சம்பளத்தில் வரிப்பிடித்தத்தைக் குறைக்கும் நற்பயன்கள் இந்தியாவிற்கு வெளியே செய்யும் பயணங்களுக்குக் கிடைக்கப் பெறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment