திரைப்படங்களில் வருவது போன்று சிறு வயதில் தொலைந்து போய், சில வருடங்களுக்குப் பிறகு, பெற்றோருடன் சேருவதைப்போல் ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி அருகே உள்ள கிராமம் மந்தளவரிப்பள்ளி. இந்த கிராமத்தின் முன்னாள் தலைவரான ரகுநாத ரெட்டிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டில் ரகுநாத ரெட்டியின் மகன் திடீரென காணாமல் போய்விடுகிறார். அப்போது அவருக்கு வயது 11.
மகனை காணாததை அடுத்து ரகுநாத ரெடி பல இடங்களில் தேடினார். ஆண்டுகள் கடந்தும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ரகுநாத ரெட்டியும், அவரது மனைவியும் திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பினர்.
அப்போது ஓட்டல் ஒன்றில் தனது மகனின் சாயலில் சிறுவன் ஒருவரை பார்த்தனர். அங்க அடையாளங்கள் காணாமல் போன தனது மகன்போல் இருந்துள்ளது. இவர்தான் தன் மகன் என ரகுநாத ரெட்டியும் மனைவியும் நம்பி, வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
ஆனால், அந்த இளைஞரோ, நான் உங்கள் மகன் இல்லை என கூறியுள்ளார். ஆனாலும், ரகுநாத ரெட்டியின் வீட்டில் அந்த இளைஞன் யாருடனும் நெருங்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ரகுநாத ரெட்டி உடல்நலக் குறைவு காரணாக திடீரென மரணமடைந்தார். தந்தை இல்லாத குடும்பத்தைப் பார்த்த அந்த இளைஞனோ, அவர்களை விட்டு செல்ல மனமில்லாமல், அவர்களுடனே இருந்து வந்துள்ளான். வீட்டின் பொறுப்புகளை ஏற்று வந்த அவன், ரெட்டியின் மகளுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார். ஆனாலும், ரெட்டியின் உண்மையான மகன் இல்லை என்பதை மட்டும் அவன் மறக்கவில்லை.
ரெட்டியின் உண்மையான மகன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த கிராமத்துக்கு கடந்த 27 ஆம் தேதி திரும்பினார். வீட்டில் தன்னுடைய பெயரில் வேறொருவர் மகனாக வாழ்ந்து வருவது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
வீட்டை விட்டு சென்ற பிறகு, தான் வளர்ந்தது குறித்தும், சிறு வயது சம்பவங்கள் அனைத்தும் உண்மையான மகன் கூறிய பிறகே அவரின் தாயும், சகோதரியும் நம்பினர்.
உண்மையான மகன் வந்துவிட்டதை அடுத்து, இனி நான் வீட்டில் தங்க விருப்பம் இல்லை என்றும், பொறுப்புகளை அவரே எடுத்துக்கொள்ளட்டும் என்றும் கூறி வளர்ப்பு மகன் வீட்டை விட்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மையான மகனோ, தான் திரும்பி குடும்பத்தை பார்க்க வந்தது சொத்துக்காக அல்ல என்றும், எந்தவிதமான பொறுப்புகளையும் ஏற்கும் வகையில் தான் வரவில்லை என்றும் கூறி குடும்பத்தரை அதிர்ச்சி அடைய வைக்கிறார். தான் திருமணம் செய்யப்போவதால், தாய் - தந்தை விவரம் தேவை என்பதால் பார்க்க வந்ததாகவும் கூறினார்.
ஆனால், பெற்ற தாயோ, வளர்ப்பு மகனும், பெற்ற மகனும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், சகோதரியோ, தன்னை பொறுப்பாக பார்த்துக் கொண்டு திருமணம் செய்து வைத்த வளர்ப்பு அண்ணன் வீட்டில் இருக்க வேண்டும் என்கிறார். இதனையே அந்த கிராம மக்களும் வளர்ப்பு மகன்தான் வீட்டில் இருக்க வேண்டும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வளர்ப்பு மகனும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய உண்மையான மகனும் என்ன முடிவெடுத்தார்கள்? எந்த மகன் வீட்டில் தங்கப்போகிறார்? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அந்த குடும்பத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி மட்டுமே உள்ளது....!
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ரெட்டியின் உறவினர், ராம்பிரசாத், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment