"

Saturday, December 9, 2017

வருடத்தின் அதிகாரப்பூர்வ நிறம் என்ன தெரியுமா?


ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இப்படி நிறம் அறிவிக்கப்படும். அதேபோல் இந்த முறையும் டிசம்பரில் அடுத்த வருடத்திற்கான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் 'பேண்டோன்' என்ற நிறுவனம் இப்படி நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. 2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.
2018ம் வருடத்தின் அதிகாரப்பூர்வ் நிறம் என்ன என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்த போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, வித்தியாசமான விளக்கத்தை அந்த நிறுவனம் கொடுத்து இருக்கிறது.

பேண்டோன் நிறுவனம் வண்ணங்கள் சம்பந்தமான நிறைய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மேலும் பெயிண்டில் தொடங்கி எழுதும் கலர் பென்சில்கள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை இந்த அமைப்பு வெளியிடும். கடந்த 2010ல் இருந்து வழக்கத்தை கொண்டு இருக்கிறது. இதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்தில் இருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் ரகசியமாக நடக்கும். மேலும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். பின் டிசம்பர் மாதத்தில் சரியாக நிறத்தை தேர்வு செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள்.



இந்த நிலையில் 2018ம் வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த நிறுவனம் 'கத்தரிப்பூ (பர்பிள்)' நிறத்தை தேர்வு செய்து இருக்கிறது. இந்த நிறம் செல்வ வளத்தை குறிக்கும் என்பதாலும், 2018ம் வருடம் அதிக செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.






No comments:

Post a Comment

Adbox