பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு சென்று வந்ததால்,
தன்னுடைய கணவர் முத்தலாக் கொடுத்துவிட்டதாக முஸ்லிம் பெண் ஒருவர் புகார்
தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருக்கிறது என கணவர் குற்றச்சாட்டியுள்ளார்.
விரைவில் சட்டம்
அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருக்கிறது என கணவர் குற்றச்சாட்டியுள்ளார்.
விரைவில் சட்டம்
முஸ்லிம்கள்
விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற
அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக
மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும்
அறிவுறுத்தியுள்ளது.இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நன்றி கூட்டம்
முத்தலாக்
முறையை ஒழிக்க மத்திய அரசு வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டம்
கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்தமுறையை அகற்ற நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில் பரேலியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த பைய்ரா என்ற பெண்ணுக்கு அவரின் கணவர் முத்தலாக் கொடுத்துள்ளதாகச் செய்திகள்வெளியாகின.
முத்தலாக்
இது
குறித்து அந்த பைய்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்
கூறுகையில், “ நானும், எனது கணவரும் கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம்
செய்தேன். என்னுடைய கணவர் அவரின் உறவுப்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு
வைத்து, அவர் மூலம் குழந்தையும் பெற்றுள்ளார். நான் பிரதமர் மோடிக்கு நன்றி
தெரிவிக்கும் கூட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பினேன்.
அப்போது
எனது கணவர், பிரதமர் மோடியால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் உனக்கு
முத்தலாக் சொல்கிறேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தினார்.
என்னையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு துரத்தினார்’’ எனத் தெரிவித்தார்.
மறுப்பு
ஆனால்,
பைய்ராவின் கணவர் தானிஷ் குற்றம்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், “
நான் என் மனைவி பைய்ராவுக்கு முத்தலாக் கூறவில்லை. அவள் மற்றொரு ஆணுடன்
கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதனால், அவளை விவாகரத்து செய்ய இருக்கிறேன்.
ஆனால், அவளின் மாமா என்னை மிரட்டுகிறார். அவள் எப்போதும் ஜீன் பேண்ட்,
போன்ற நாகரீக உடைகளையே அணிகிறார். அதனால் எனது மனைவியுடன் வாழ எனக்கு
விருப்பமில்லை. மோடியின் கூட்டத்துக்கு சென்றதற்கும் இதற்கும்
தொடர்பில்லை’’ என்றார்.
No comments:
Post a Comment