காற்றழுத்தத் தாழ்வு நிலையால் பேராபத்து எதுவும் நேரிடாது, புரளிகளால் நீங்கள் நிறுத்தி வைத்திருந்த பணிகளை வழக்கம் போல தொடருங்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவானிலும் பலவீனமானதாகவே இருக்கும் என்றும், அதனால் தமிழக மக்கள் அதிகம் பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று காலை அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, 'மொக்க குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் / மொக்க புயல் சின்னமாகவும் உருவாகும் வாய்ப்பு குறித்த பதிவு' என்று தலைப்பிட்டுள்ளார்.
முதலில் 'குறிப்பு' ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது, இது தனது தனிப்பட்ட கணிப்பு என்றும், நான் எந்த குழப்பத்தையும் உருவாக்க விரும்பவில்லை. உங்களுக்குத் தேவையான தகவல்களுக்கு ஐஎம்டி (IMD) எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நாளைக்குள் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது புயல் சின்னமாக உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது.
வரும் நாட்களில், செயற்கைக் கோள் புகைப்படங்களில் மிகப்பெரிய மேகக் கூட்டங்களை நாம் பார்க்கலாம். ஆனால், அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
ஏன் என்றால், அந்த புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை அடையும் முன்பே அங்கிருக்கும் சாதகமற்ற சூழ்நிலை காரணமாக அது பலவீனமாகிவிடும்.
ஒரு வேளை அதிர்ஷ்டம் இருப்பின், அந்த மேகக் கூட்டங்களின் சுழற்சியால் ஒரு சில மேகத் திரட்டுகள் தமிழகம் மீது வந்து விழுந்தால் ஒரு நாள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை விட்டு புயல் சின்னம் ஆந்திராவை நோக்கிச் செல்லும் போது அது வெறும் எலும்புக்கூடாகத்தான் சென்றடையும்.
எனவே, இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து பயப்பட வேண்டாம்.
சென்னைக்குப் பேராபத்து என்ற புரளிகளால் வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு ஊருக்குப் போக நினைத்தவர்களும், தங்களது பணிகளை நிறுத்தி இருந்தவர்களும், வழக்கம் போல பணிகளைத் தொடரலாம். மதிப்பற்ற விடுமுறையை வீணாக்க வேண்டாம்.
இந்த மொக்க தாழ்வு நிலை பற்றி தொடர்ந்து பதிவிடுவேன்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் பரப்பு மிக மோசமாக இருக்கும் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Monday, December 4, 2017
Home
/
Unlabelled
/
சென்னைப் பற்றிய புரளிகளால் பீதியடைந்து நிறுத்திய பணிகளை தொடருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன்
சென்னைப் பற்றிய புரளிகளால் பீதியடைந்து நிறுத்திய பணிகளை தொடருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment