"

Monday, April 15, 2019

கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் மற்றும் வழிமுறைகள்



தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். சிலருக்கு உடல் சூடாகவே இருக்கும். காரணம் அவர்களின் உடல் எப்போதுமே அதிகப்படியான சூட்டை எதிர் கொள்ளவதால் தான். உடலில் நீர் வறட்சி ஏற்படுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, அதிக வெப்பதில் அலைவது, கூட்ட நெரிசலான இடத்தில் இருப்பது போன்றவற்றின் காரணமாக உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எளிமையான முறையில் உடல் வெப்பம் தணிக்க கூடிய உணவு முறைகள் பற்றி காண்போம்.



ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம். முலாம்பழம்- உடல் வெப்பத்தை குறைக்க மிகவும் புயன்பட கூடிய பழம் தான் முலாம் பழம். இதில் உள்ள நீர் சத்து உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க உதவும். தினமும் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதோடு குளிர்ச்சியை அதிகரிக்க செய்யலாம். இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.  வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும்  உடலின் வெப்பமும் குறையும்.



மாதுளை பழம் - மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின்  வெப்பம் வேகமாக குறையும். பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும். புதினா இயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும். இளநீர்உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும். தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

No comments:

Post a Comment

Adbox